2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

சபைக்கு முன்பாக சிங்கள மொழியில் பதாதைகள்

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வவுனியா பிராந்திய அலுவலகத்துக்கு முன்னால், சிங்கள மொழியில் மாத்திரம் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக குறித்த பகுதியில் சஜித் பிரேமதாஸவை பிரதிநித்துவப்படுத்தும் வகையில், தமிழ், சிங்கள மொழிகளில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது விமல் வீரவன்ச, மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் தனிச்சிங்கள மொழியில் வசனங்கள் அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெரும்பாண்மை தமிழர்களை கொண்ட வவுனியா மாவட்டத்தில், முக்கிய அரச திணைக்களத்துக்கு முன்பாக தனி சிங்கள மொழியில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை பொதுமக்களை விசனமடைய செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .