2025 ஜூலை 12, சனிக்கிழமை

‘சமுர்த்தி பயனாளிகள் தெரிவை மீளாய்வு செய்க’

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 ஜூலை 18 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகள் தெரிவை, மீண்டும் மீளாய்வுக்குட்டுப்படுத்தி, பொருத்தமான பயனாளிகளை தெரிவுசெய்யுமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு. சந்திரகுமார் அமைச்சர் எஸ்பி. திஸநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

போரினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகியவை காணப்படுகின்றன. இங்கு வாழ்கின்ற மக்களில் பெரும்பாலானவர்கள், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். எனவேதான் 2013ஆம் ஆண்டு இங்கு சமுர்த்தி அறிமுகப்படுத்தும்போது, 30 சதவீதமானவர்களுக்கு சமுர்த்தி வழங்கப்பட்டது. அதாவது, 11,550 குடும்பங்களுக்கு வழங்க்கப்பட்டது. இருந்தபோதும், மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகக் காண்பபட்டதன் காரணமாக, 60 சதவீதமானவர்களுக்கு சமுர்த்தியை வழங்குமாறு நாம் கோரியிருந்தோம். அதனடிப்படையில், மேலும் சுமார் 11,500 குடும்பங்களை, சமுர்த்தி பயனாளிகளாகச் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை, இந்நிலையில், தற்போது சமுர்த்தி பயனாளிகள் மீளாய்வு செய்யப்பட்டு, தெரிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில் அது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சமுர்த்தி பயனாளிகளை, மீளாய்வு செய்வதற்காக விண்ணப்பப் படிவங்கள் வழங்கி பூரணப்படுத்தப்பட்டபோது, சரியான தகவல்கள் வழங்கப்படவில்லை. இதனால் அவை கணினி மயப்படுத்தப்பட்டு, கணினி மூலம் புள்ளியிடப்பட்டு, புதிய சமுர்த்தி பயனாளிகள் தெரிவுகள் இடம்பெற்றபோதே, மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டுளளது. இதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே பொருத்தமான ஒரு முறையின் ஊடாக சமுர்த்தி பயனாளிகள் தெரிவுகள் மீளவும் மேற்கொள்ளப்படவேண்டும். 

அதுமட்டுமல்ல, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தற்போதைய மதிப்பீட்டு முறை பொருத்தமற்றதாக காணப்படுகிறது. எனவே, இவ்வாறான மக்கள், தம்முடைய அன்றாட வாழ்வுக்கான உழைக்கும் திறன்களையும் வழிகளையும் கொண்ட முறைமைகள் எதுவும் கணக்கில் எடுக்கப்படாது, ஏறக்குறைய நான்கு ஆண்டுகளில், ஏனைய மாவட்டங்கள், ஏறக்குறைய 1993இலிருந்து அனுபவித்து வந்த சமூர்த்தியின் நன்மைகளை அனுபவிக்க முடியாது இவர்கள் புறமொதுக்கப்படுகின்றனர். வருமானம் குறைந்த குடும்பங்களின் அபிவிருத்திக்கு மேம்பாட்டுக்கு, 2023 வரையாவது இத்திட்டத்தை மாற்றமின்றி தொடரவேண்டும் என்பதோடு, நிறுத்தப்படுமாக இருந்தால், மாற்று வலுவுடைய திறனாளிகள், மகளிர் தலைமை தாங்கும் குடும்பங்கள் எனபன, பொருளாதார மேம்பாட்டு நிலைமையை இழக்கும் அபாயம் ஏற்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .