Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 மார்ச் 22 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி தட்டுவன்கொட்டி கிராமத்தின் பிரதான வீதி புனரமைக்கப்;படாமை, போதிய குடிநீர் வசதியின்மை காரணமாக 99 குடும்பங்களைச் சேர்ந்த 347 பேர் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஓர் கிராமமாக காணப்படும் தட்டுவன்கொட்டிக் கிராமத்தின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமையினால் இங்கு வாழும் மக்கள் தினமும் பல்Nறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதாவது குறித்த கிராமத்தின் பிரதான வீதியாக காணப்படும் ஆனையிறவு தட்டுவன்கொட்டி வீதி இன்றுவரை புனரமைக்கப்படாமல் காணப்;படுவதுடன் இதனூடாக மக்கள் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. குறித்த வீதியில் உள்ள பாலங்கள் புனரமைக்;கப்படாத நிலையிலும் காணப்படுகின்றன.
இவ்வாறு குறித்த வீதி காணப்படுவதனால் பருவமழை காலங்களிலும் ஏனைய காலங்களிலும் மக்கள் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இதேவேளை, குறித்த கிராமத்துக்கான குடிநீர், வேறு இடத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டு கரைச்சிப் பிரதேச சபையினால் விநியோகிக்கப்பட்டு வருகின்றபோதும் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. அவ்வாறு தமக்கு தேவையான குடிநீரைப் பெறுவதற்கு பரந்தன் அல்லது இயக்கச்சி ஆகிய இடங்களிற்கு சென்றே பெற வேண்டியுள்ளது. பிரதேச சபையினால் சீரான குடிநீர்விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை எனஇப்பகுதி மக்கள் தெரிவித்;;துள்ளனர்.
தற்போது வரட்சியின் காரணமாக குடிநீர் தேவை அதிகரித்துக் காணப்;படுகின்றது. அத்துடன் தட்டுவன்கொட்டி பாடசாலைக்கான குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்ளப்படாமையினால் மாணவர்களும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறு போதிய அடிப்படை வசதிகள் இன்றியும் போக்குவரத்து வீதி சீரின்மையால் போக்;குவரத்துச் செய்வதிலும் தாம் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அம் மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025