Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில் ஒரே இரவில் மூன்று மோட்டார் சைக்கிள்களை திருடிய நிலையில், இரண்டு மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா - சிதம்பரபுரம் பகுதியில், இரண்டு மோட்டார் சைக்கிள்களும், சமணங்குளம் பகுதியில், ஒரு மோட்டார் சைக்கிளும். சிதம்பரநகர் பகுதியில், ஒரு சைக்கிளும் திருடர்களால் களவாடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சிதம்பரபுரம் பகுதியில் கடந்த இரண்டாம் திகதி இரவு இரு வேறு வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர்கள் மோட்டார் சைக்கிளின் திறப்புகள் இல்லாத நிலையில் மோட்டார் வண்டிகளை சேதப்படுத்தி குளத்து வெளியில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சமணங்குளம் பகுதியில், ஆசிரியை ஒருவரின் மோட்டார் வண்டியானது திறப்புடன் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அவ்வண்டியானது திருடர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் சிதம்பரநகர் பகுதியில் சைக்கிளும் திருடப்பட்டுள்ளது.
இத்தொடர் திருட்டுச்சம்பவம் குறித்து சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையி,ல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
24 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
56 minute ago
2 hours ago