2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தளபாடங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம், தனது 2018 ஆம்ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம், யா/ சரவணை நாகேஸ்வரி மகாவித்தியாலயத்துக்கு மேசைகள், கதிரைகள், அலுமாரிகள் என ஒருஇலட்சம் ரூபாய் பெறுமதியான தளபாடங்களை நேற்று (10) வழங்கி வைத்தார்.

மேற்படி பாடசாலைச் சமூகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக நேரில்பாடசாலைக்குச் சென்று பார்வையிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என்.விந்தன் கனகரட்ணம், யா/ சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயத்துக்குமேசைகள், கதிரைகள், அலுமாரிகள் என்பனவற்றைக் கொள்வனவு செய்து,வேலணை பிரதேசசபை உறுப்பினர்களான செல்லப்பா பார்த்தீபன், சிவலிங்கம் அசோக்குமார் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கிரிதரன் ஆகியோருடன் பாடசாலையில் வைத்து வழங்கிவைத்தார்.

பாடசாலை அதிபர் றொகான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சரவணை உறவுப்பால அமைப்பின் தலைவர் லிங்கேசன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் சோ. மயூரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X