2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

நகையை அபகரித்தவர்களை தேடி வலைவீச்சு

Editorial   / 2020 மார்ச் 14 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு பொலீஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் தங்கபுரம் பகுதியில் (13) இரவு வீட்டுக்குள் நுளைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த  40 வயது மதிக்கதக்க ​குடும்ப பெண் மீது தாக்குதல் நடத்திவிட்டு கழுத்தில் இருந்த இரண்டரைப் பவுண் தங்க சங்கிலியினை அபகரித்து சென்றுள்ளனர். 

இச்சம்பம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

கொள்ளையர்களின் தாக்குதலில் காயடைந்த பெண் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பொலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X