2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

நந்திக் கடலை ஆழமாக்குங்கள்

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு நந்திக் கடலினை ஆழமாக்கும் முயற்சிகளை உரிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மேற்கொள்ளவில்லை என இப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலேயே இறால் பெருக்கம் மிகுந்த பகுதியாக நந்திக்கடல் காணப்படுகின்ற போதிலும் அப்பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் இலாபத்தை பெற்றுக் கொள்ள முடியாமல் வறுமை நிலையில் உள்ளனர். நந்திக்கடல் பகுதியில் காணப்படுகின்ற சேறு காரணமாகவே இறால் பெருக்கம் குறைவாக காணப்படுகின்றது.

அதில் காணப்படுகின்ற சேறு அகற்றப்பட்டு நந்திக்கடல் ஆழமாக்கப்படுவதன் மூலம் இறால் பெருக்கம் அதிகரித்து கடற்றொழிலாளர்களின் தொழில் முயற்சிகள் உயர்ந்து வாழ்வாதாரம் பலப்படும். இவ்விடயம் தொடர்பில் பல முறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இக்கடலை நம்பி முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ள நிலையில் நந்திக் கடலினை ஆழமாக்குவதற்கு விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .