Niroshini / 2016 மார்ச் 15 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் சேதமடைந்துள்ள நிலையில் உள்ள நெற்களஞ்சியசாலையை புனரமைக்க 1.3மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியாவில் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யும் நெல்லினை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு களஞ்சியசாலை வசதிகள் பற்றாக்குறையாகவுள்ளது. குறிப்பாக வேப்பங்குளம் பகுதியில் உள்ள நான்கு களஞ்சியசாலைகளில் மூன்று களஞ்சியசாலைகளே பாவனையில் உள்ளன. அவற்றில் ஒன்று பாவிக்க முடியாத வகையில் சேதமடைந்துள்ளது.
இதனை புனரமைப்பதற்கு 1.3 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. இதனால் அடுத்து வரும் சிறுபோக காலப்பகுதியில் இக் களஞ்சியசாலையைப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வேப்பங்குளம் பகுதியில் உள்ள ஏனைய மூன்று களஞ்சியசாலைகளில் இரண்டு களஞ்சியசாலைகளில் கடந்த வருடத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெல் களஞ்சியப்படுத்தப்பட்டு இருப்பதுடன், ஒரு களஞ்சியசாலையில் தற்போது நெற்கொள்வனவு இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago