2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை நுழைவாயில் அமைப்பில் சீன கட்டடக் கலை

Editorial   / 2017 ஜூன் 04 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

“கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் பாதையின் நுழைவாயில் கட்டட அமைப்பு, தமிழ் கட்டடக் கலையை வெளிப்படுத்தாமல், சீன கட்டடக் கலையை கொண்டிருக்கிறது” என தெரிவிக்கப்படுகின்றது.

“நுழைவாயில் கட்டடம் அமைப்பதற்கான உள்ளீடுகள், பாடசாலையால் வழங்கப்பட்டு  இராணுவத்தின் இலவச மனித வலுவை பயன்படுத்தி நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நுழைவாயில் கட்டட அமைப்பை இராணுவத்தினர் தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்துள்ளனர்” என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில், யாழ். பல்கலைகழத்தின் புலமைசார் விரிவுரையாளர் ஒருவரிடம் நுழைவாயிலின் புகைப்படத்தை அனுப்பி கருத்து கேட்டபோது, “இந்த நுழைவாயில் கட்டிட அமைப்பு சீன கட்டிட கலையின் அம்சத்தை  கொண்டுள்ளது” என்று கூறினார்.

“அத்துடன், சீன கட்டடக் கலை என்பது பௌத்தத்துக்கு நெருக்கமான கட்டடக் கலை. தமிழ்ச் சூழலுக்குள் இது ஒரு புதிய விடயமல்ல. வரலாற்றோடு சம்மந்தப்பட்ட விடயங்கள் என்பதால் பொது இடங்களில் கட்டடங்களை அமைக்கும் போது, அவை தமிழ்  பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கின்ற வகையில் இருப்பது சிறந்தது” என்றார்.

“அத்தோடு, நுழைவாயில் கட்டடக் கூரையின் நான்கு பக்க கீழிறங்கிய வளைவு, சீன கட்டடக் கலைக்குரியது. தலதா மாளிகை  உட்பட தெற்கில் இவ்வாறான கூரைகளை கொண்ட பல கட்டடங்கள் காணப்படுகின்றன” என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .