2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

’பொதுத் தேர்தல் வரை பொறுத்திருக்க’

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை, முன்பள்ளி ஆசிரியர்கள் பொறுத்திருக்க வேண்டும் என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு, குமுழமுனை-தாமரைக்கேணி பகுதியில், முன்பள்ளி ஆசிரியர்களின் நிலைப்பாடு தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் நடைபெற்றது.

நேற்று (20) மாலை, ​ தாமரைக்கேணி பொதுநோக்கு மண்டப வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.

முன்பள்ளி ஆசிரியர்கள், தங்களை நிதந்தரமாக்கக் கோரியும் சம்பள உயர்வைக்கு கோரியும் இந்த மாதம் தொடக்கம் பணியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும், பொதுத்தேர்தல் வரை பொறுத்திருக்க வேண்டும் என்றும் தேர்தல் முடிந்த பின்னர், நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கோரினார்.

அதுவரை, ஆசிரியர்கள், சேவையை தொடர்ச்சியாக நடத்திச் செல்லுமாறும் அவர் கோரினார்.

கல்வித்தமை குறைந்த, வறுமையான 1இலட்சம் பேருக்கு, வேலைவாய்ப்பு கொடுப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாகக் கூறிய அவர், இதை, சில கட்சிகள் வியாபாரமாக்கிக்கொண்டுள்ளன என்றும் இதற்காக ஒரு சிலர் பொதுமக்களிடம் நிதிகளை பெற்று வருகின்றமை குறித்து, பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரச வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு, யாருக்கும் இலஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என்றும் எனவே, இனிவரும் காலப்பகுதியில், கட்டம் கட்டமாக வேலைவாய்ப்புப் பெற்றுக்கொடுக்கப்படும் என, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--