2021 மார்ச் 03, புதன்கிழமை

29 பயனாளிகளுக்கு கால்நடைகள் வழங்கிவைப்பு

George   / 2016 மே 21 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என். நிபோஜன்

கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தை முன்னிட்டு 29 பயனாளிகளுக்கு கால்நடைகள் இன்று சனிக்கிழமை (21) வழங்கப்பட்டன.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பயனாளிகளுக்கு கால்நடைகளை வழங்கிவைத்தார்.

'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மாலான உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இக்கால்நடைகள் வழங்கப்பட்டுள்ளன.

யுத்தத்தால் வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் போன்ற பயன்தரு இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், வேலை வாய்ப்புக்கள் இல்லாது போயுள்ளன. அவற்றை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .