2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பொலிஸாரின் பின்னணியுடன் மணல் அகழ்வு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், பொலிஸார் மற்றும்  பொலிஸாரின் பின்னணியுடன் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாக, இரணைமடு விவசாய சம்மேளனம் தெரிவித்தது.

மாவட்டச் செயலகத்தில் இன்று (11) நடைபெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போதே, அச்சம்மேளனம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் விவசாயிகளினுடைய பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், மாவட்டத்தில் எதிர்கொள்கின்ற சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்திலிருந்து ஊரியான் வரைக்குமான கனகராயன் ஆற்றுப் பகுதியில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் பெருமளவான வளங்கள் அழிவடைவதுடன், வயல்நிலங்களும் பாழாகி வருவதாகவும் இரணைமடு விவசாயிகள் சம்மேளத்தின் தலைவர் மு.சிவமோகன் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வுகளால் விவசாய நிலங்களும் ஆற்றுப்படுக்கைகளும் வீதிகளும் சேதமடைந்து வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் முற்றுமுழுதாக பொலிஸார் மற்றும் பொலிஸாரின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுடிக்காட்டினார்.

இது தொடர்பில் பதிலளித்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவடடங்களுக்கான பொலிஸ் பொறுப்பதிகாரி, கடந்த மூன்று வார காலத்துக்கு முன்னர்தான் இவ்வாறான பொறுப்பை ஏற்றிருப்பதாகவும் குறிப்பிட்ட காலத்துக்குள் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தன்னாலான முழு முயற்சிகளை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X