2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

பஸ் சேவையினை நீடிக்கும்படி கோரிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சியில் இருந்து பூநகரி வரை நடைபெறுகின்ற இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவையினை பூநகரியின் பள்ளிக்குடா, செம்மங்குன்று வரை நீடிக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலை வேளையில் பூநகரி மகா வித்தியாலயத்திற்கு மாணவர்கள் வருகை தருவதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன், பாடசாலை முடிந்து வீடு திரும்புவதில் இடர்களை எதிர்கொள்கின்றதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பூநகரி வாடியடிச் சந்தியில் கிளிநொச்சியில் இருந்து வருகை தந்து நீண்ட நேரம் காத்திருக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள், பள்ளிக்குடா செம்மங்குன்று வரை பணியில் ஈடுபட்டால் மேற்படி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறும். இதுதொடர்பாக பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் பயன் கிடைக்கவில்லை என, பள்ளிக்குடா, செம்மங்குன்று மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--