2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பொதுமக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீனின் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொதுமக்கள் தொடர்பு அதிகாரிகளாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் புதன்கிழமை(7) கைத்தொழில், வணிகத்துறை அமைச்சில் வைத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் உத்தியோகப்பூர்வமாக வழங்கி வைத்தார்.

மன்னார் மாவட்ட பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக வாங்காளையை சேர்ந்த மார்க் அண்டனும் முல்லைத்தீவு மாவட்ட பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக கமலநாதன் விஜின்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் முன்னாள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்பல் ரெவல் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .