2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

பிரதேச சபை கட்டட அடிக்கல் நாட்டு விழா

George   / 2016 மார்ச் 19 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறநெகும வேலைத்திட்டத்தின் கீழ் 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் , மாந்தை மேற்கு பிரதேச சபையின் பிரதான அலுவலக கட்டட அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மதியம் இடம் பெற்றது.

குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகஸ்தர் திருமதி.தி.புண்ணியலிங்கம் , மாந்தை மேற்கு பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் .ச.ஜெனிங்ஸ், மாந்தை மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சு.வரப்பிரகாசம் , முன்னாள் உப தவிசாளர் சீ.சௌந்தரநாயகம், அடம்பன் பங்குத்தந்தை அருட்பணி நியூட்டன் அடிகளார், ஆட்காட்டி வெளி பங்குத்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அடிகளார், மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .