2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

‘மணல் அகழ்வுக்கான அனுமதிகள் இடைநிறுத்தம்’

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில், மணல் அகழ்வுக்கான அனுமதிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக, துணுக்காய் பிரதேசச் செயலாளர் திருமதி.ச.லதுமீரா தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், மணல் அகழ்வுக்கான அனுமதிகளை பிரதேச செயலகம் வழங்குவதில்லையெனவும் மணல் கொண்டு செல்வதை, பிரதேச செயலகத்தால் தடுக்க முடியாதெனவும் தெரிவித்தார்.திட்டத்துக்காக மாத்திரமே, மணல் அகழப்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்நிலையில், அதிகரித்து வரும் மணல் அகழ்வுச் செயற்பாட்டைக் கருத்தில் கொண்டு, மணல் அகழ்வுக்கான அனுமதிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--