Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2016 ஜூலை 28 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான இடங்கள், அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து, வீட்டுத்திட்ட பயனாளிகளுக்குரிய மணலைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என, மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 'கண்டாவளைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு, வண்ணாத்தியாறு, கல்லாறு, புளியம்பொக்கணை, முரசுமோட்டை, தட்டுவன்கொட்டி, நெத்தலியாறு, தர்மபுரம், கல்மடு ஆகிய இடங்களும், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் வன்னேரிக்குளம், அக்கராயன்குளம், கண்ணகைபுரம் ஆகிய இடங்களும், பிற பிரதேசங்களில் கோரமோட்டை, பழைய ஐயன்குளம் ஆகிய பிரதேசங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு உழவு இயந்திர மணல் 2500 ரூபாய் என நிர்ணயமான விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் கல்வி அபிவிருத்தி நிதியத்துக்கு 500 ரூபாய் வழங்கப்பட வேண்டும். இந்த ஏற்பாடுகள் மாவட்டத்துக்குள் வசிக்கும் மக்களின் மணல் தேவைக்கு ஏற்றவகையில் செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் வரும் சட்டவிரோத மணல் அகழ்வால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், வீதிகளும் மோசமாக பாதிக்கப்படுகின்றன.
சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பாக எமக்கு கிடைக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பாக உடனடியாக அவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு கிராமஅலுவலர் பிரிவுகளிலும் சட்டவிரோதமான மணல் அகழ்வுகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் மற்றும் வாகனங்கள் பற்றிய விபரங்கள் யாவும் திரட்டப்பட்டு அவற்றுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து மணல் வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதற்கான எதுவித அனுமதிகளும் வழங்கப்படவில்லை. தற்போது மாவட்டத்தில் மணல் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
3 hours ago
7 hours ago
8 hours ago