2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

’முதலாளிகளுக்கான அரசாங்கமா?’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 மே 25 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

'தற்போதைய அரசாங்கமானது, முற்றுமுழுதாக முதலாளிகளுக்கான அரசாங்கமாகவே இருக்கின்றது. தவிர, கூட்டுறவுத் துறைக்கான அரசாங்கமாக இல்லை' என்று, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

கிளிநாச்சி, பூநகரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எரிபொருள் விற்பனை நிலையத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 'வடக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 100ஆவது எரிபொருள் நிரப்பு நிலையமாக, இது காணப்படுகின்றது. இந்த நூறில் 53 எரிபொருள் நிலையங்கள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் எரிபொருள் நிலையங்களாகவே உள்ளன.

கூட்டுறவுத்துறை என்பது இன்றும் உயிர்வாழ்க்கின்றதென்பதை, இது புலப்படுத்துகின்றது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X