2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மன்னாரில் கோட்டாவின் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டம்

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆதரவாளர்கள், மன்னார் பஸார் பகுதியில், இன்று (18), பாற்சோறு வழங்கி வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும் மன்னார் நகர சபை உறுப்பினருமான செல்வக்குமரன் டிலான் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, ஆதரவாளர்களால் பட்டாசு கொழுத்தி, மக்களுக்கு பாற்சோறு வழங்கி, வெற்றிக் கொண்டாட்டப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த செல்வக்குமரன் டிலான், ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவுடைய வெற்றியை, மன்னார் மாவட்ட சிறுபான்மை மக்களாகிய தாங்களும் கொண்டாடுவதாகவும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .