2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மன்னாரில் நடமாடும் சேவை

Editorial   / 2019 நவம்பர் 20 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் உப காரியலயத்தால், முசலி, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடமாடும் சேவையொன்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதலாவது நடமாடும் சேவையானது, இன்று (21) முற்பகல் 9.30 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரை, முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் மீள்குடியேற்ற கிராமத்தில் உள்ள மலங்காடு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது நடமாடும் சேவையானது, நாளை (22) முற்பகல் 9.30 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரை, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்  பிரிவில் உள்ள இலுப்பக்கடவை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .