2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் விசேட நடமாடும் சேவை

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மன்னார் உப காரியாலயத்தின் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  இலுப்பைக்கடவை பகுதிகளில், விசேட நடமாடும் சேவையொன்று,  இன்று (22) காலை 10 மணிக்கு, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில், இலுப்பைகடவை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி. கணகராஜ். மாவட்ட ரீதியாகவும் மாகண ரீதியாகவும் சேவை வழங்கும் திணைக்களங்கள், ஆணையாளர்கள் பிரதேச செயலாளர்கள் உட்பட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மக்களின் காணி, அடிப்படை உரிமை, சட்ட உதவி போன்ற விடயங்கள் தொடர்பாக விசேட உதவிகளை வழங்கும் முகமாக குறித்த நடாமாடும் சேவையானது ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது, மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .