2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மன்னார் கடற்பரப்பில் மர்மப்பொருள் வெடித்ததில் மீனவர் பலி

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 செப்டெம்பர் 01 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பொருளை எடுத்த மீனவர் ஒருவர் அதனை சோதனைக்கு உட்படுத்தியபோது குறித்த மர்மப்பொருள் வெடித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,மேலும் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
 
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் நேற்று இரவு 11.30 மணியளவில் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து படகு ஒன்றில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இதன்போது பள்ளிமுனை- நாச்சிக்குடா கடற்பகுதியில் மிதந்து வந்த மர்மப்பொருளை குறித்த மீனவர்கள் அவதானித்துள்ளனர்.
 
இதன்போது ஜேசு ரஞ்சித் (வயது-39) என்ற மீனவர் குறித்த மர்மப்பொருளை எடுத்து படகினுள் வைத்து சோதனைக்கு உட்படுத்தியதாக தெரிய வருகின்றது. அதன் போது குறித்த மர்மப்பொருள் வெடித்ததில் ஜேசு ரஞ்சித் (வயது-39) என்ற மீனவர் உடல் சிதறிப பலியானார்.
 
மேலும் குறித்த படகில் இருந்த ஏ.ஏ. சித்தி பிகிராடோ (வயது-35), எம். அகஸ்ரின் பிகிராடோ(வயது-26) ஆகிய இரு மீனவர்களும் படுகாயமடைந்ததோடு,அந்தோனி பிகிராடோ (வயது-39) என்பவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினார்.
 
இந்நிலையில், சடலம் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு,காயமடைந்தவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .