2021 மே 10, திங்கட்கிழமை

மர்மமான முறையில் முன்னாள் போராளி உயிரிழப்பு

Gavitha   / 2015 நவம்பர் 22 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்றாம் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியான 3 பிள்ளைகளின் தந்தையொருவர் சனிக்கிழமை (21) அவரது வீட்டு முற்றத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியான வீரசிங்கம் தனபாலசிங்கம் (வயது 40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதோடு, சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இவர், முன்னாள் போராளியாக இருந்த நிலையில், பல வருடங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட பின் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை மூன்றாம் பிட்டி கிராமத்தில் ஒரு இளைஞனை அக்கிராமத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் தாக்கியதால் அவ்விளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை, விரசிங்க தனபாலசிங்கம்  நேரில் கண்டார் என்று அவருடைய உறவினர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர் விசாரனைகளை மேற்கொண்ட இலுப்பைக்கடவை பொலிஸார், இளைஞனை தாக்கிய தாக்கிய மூன்றாம் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களையும் சனிக்கிழமை (21) கைது செய்துள்ளதுடன் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X