2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின்5 மில்லியன் ரூபாய் நிதி உதவியில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் கடலுணவு உணவகத்துக்கான அடிக்கல், இன்றையதினம் (03) நாட்டி வைக்கப்பட்டது.

இந்த உணவகம், முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியில் அமையவுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தால், பெண்கள் வாழ்வாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு, இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில், ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகராலய நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான நிகழ்ச்சி திட்ட பணிப்பளார், உதவி திட்டமிடல் பணிப்பளார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .