2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் மகளிர் தின நிகழ்வு

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின நிகழ்வுகள் ''அவள் தைரியமானவள் நாட்டுக்கு பலமானவள்'' எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 17ஆம் திகதியன்று நடைபெறவுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையோடு, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்துள்ள குறித்த மகளிர் தின நிகழ்வில், உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும் நடைபெறவுள்ளன.

 அன்றைய தினம், பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி முல்லைத்தீவு பொதுச் சந்தை முன்றலில் இருந்து மாவட்ட செயலகம் வரை நடைபவனியும், அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலக வளாகத்தில் கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், சிறப்பு விருந்தினராக உள்ளூர் உற்பத்திகள்  ஊடாக சர்வதேச ரீதியில் புகழ்பெற்று விளங்குகின்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த பெண் தொழில் முயற்சியாளர்கள் சாயிராணி உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .