2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

முல்லைத்தீவு கடகில் மீன்பாடு குறைவு

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக கடலில் மீன்பாடு குறைவு காரணமாக, குறித்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் கடற்லொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதி வரை, இரண்டு தடவைகள் பெரும் மழை பெய்துள்ளது என்றும் இதனால், பல நாள்களாக தாங்கள் கடற்றொழிலுக்குச் செல்லவில்லை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

கடல் சீற்றம், சீரற்ற காலநிலை தொடர்ச்சியாக நிலவியதால், கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளுக்குச் செல்லவில்லை என்றும் தற்போதும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், கடற்றொழில் நடவடிக்கைகளுக்குச் சென்றும் மீன்பாடு இல்லாதகாரணத்தால், மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .