2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மலையாள்புரத்துக்கு குடிநீர் விநியோகம்

Niroshini   / 2016 மே 20 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மலையாள்புரம் கிராமத்துக்கான குடிநீர் விநியோகம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வருடம் பூராகவும் குடிநீர் விநியோகிக்க வேண்டிய கிராமமாகக் காணப்பட்ட இந்தக் கிராமத்துக்கு நிரந்தர குடிநீர் விநியோகம் செய்யும் மார்க்கம் உருவாக்க வேண்டியிருந்தது.

இதற்கிணங்க, வடமாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியில் 2 மில்லியன் ரூபாய் செலவில் மலையாள்புரம் கிராமத்துக்கான குடிநீர் விநியோகம் கரைச்சிப் பிரதேச சபையால் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந.பிரபாகரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .