2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மீள்குடியேற்றத்துக்கு 720 பேர் பதிவு

Editorial   / 2017 ஜூன் 04 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறஅனுமதிக்குமாறு சுமார் 720 பேர், பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக, மாவட்டச் செயலகப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரவுகளில், 43,720 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளனர். அத்துடன், 720  குடும்பங்கள் மீள்குடியேறுவதற்காக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

கரைச்சியில் 125 குடும்பங்கள், கண்டாவளையில் 16 குடும்பங்கள், பூநகரியில் 346 குடும்பங்கள் மற்றும் பச்சிலைப்பள்ளியில் 233 குடும்பங்கள் என, 720 குடும்பங்களைச் சேர்ந்த 2509 பேர், பதிவு செய்துள்ளனர்.

பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட இரணைதீவு விடுவிக்கப்படாமை மற்றுமட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை பகுதியில் வெடிபொருள் அகற்றுவதில் காணப்படும் தாமதம் காரணமாக அதிகளவான குடும்பங்களும், படையினர் வசம் தமது காணிகள் உள்ளதால் சில குடும்பங்களும் மீள்குடியேறமுடியாத நிலை காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X