Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 07 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
'கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கடமையாற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டு, அவர்கள் மாகாண கல்வி அமைச்சின் கீழ் பணியாற்ற வேண்டும்' என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
'முன்பள்ளி ஆசிரியர்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுவது, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாத்திரமே காணப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பாக நான் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தேன்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக முன்பள்ளி ஆசிரியர்களை விடுவித்து, அவர்கள் வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதுடன் அவர்களுக்கான கொடுப்பனவும் மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியினால பணிக்கப்பட்டுள்ளது' என்றார்.
மேலும், 'இங்குள்ள பல முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நடைமுறைகள் இராணுவ விதிப் படி நடைபெறுவதுடன், முன்பள்ளி மாணவர்களுக்கு இராணுவச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட சீருடைகளும் வழங்கப்படுகின்றன.
அவர்களது விளையாட்டுப் போட்டிகளில் இராணுவ கொடி ஏற்றப்படுகின்றது. முன்பள்ளி நிகழ்வுகளில் இராணுவ பிரசன்னம் காணப்படுகின்றது.
எனவே, ஜனாதிபதி இந்த விடயத்தில் தீர்க்கமான முடிவைப் பெற்றுத்தருவார் என எதிர்பார்க்கின்றேன்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago