2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மாணவன் துஷ்பிரயோகம்: ஆசிரியருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2016 ஜூலை 15 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவரை துஷ்பிரயோகத்;துக்கு  உள்ளாக்கிய ஆசிரியரை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, வியாழக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி நகரில் உள்;ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்;கின்ற ஆசிரியர் ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்;று வருகின்ற மாணவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உள்ளாக்கியதாக, பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

அவரை, வியாழக்கிழமை (14) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து, குறித்த ஆசிரியரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .