2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

30 முதிரை மரக்குற்றிகள் மீட்பு

Niroshini   / 2016 மே 25 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் காட்டுப் பகுதியிலிருந்து, சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 முதிரை மரக்குற்றிகளை வனவளத்துறை திணைக்கள அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (24) கைப்பற்றப்பட்டுள்ளன. இருந்தும், இதனை வெட்டி மறைத்து வைத்தமை தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

மாந்தை கிழக்குப் பகுதியின் சிறாட்டிகுளம், விநாயகபுரம், கரும்புள்ளியான் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்தும் சட்டவிரோத மரக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன.

கரும்புள்ளியான் பகுதியில் கிரவல் மண் அகழ்வு செய்யப்படும் இடமொன்றின் அருகில் உள்ள பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.

ஒவ்வொரு மரக்குற்றிகளும் சுமார் 10 அடி நீளம் கொண்டவை.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாங்குளம் வனவள திணைக்கள வட்டாரப் பொறுப்பதிகாரி சமரக்கோன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .