Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 23 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நா.நவரத்தினராசா
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதிக்கு இதுவரையில் மின்சாரம் வழங்கப்படாமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்தனர்.
2012ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதையடுத்து, இங்கு சுமார் 450 வரையான குடும்பங்கள் மீளக்குடியமர்ந்தனர். இவர்களில் சிலருக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள போதும், பெரும்பாலான குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.
இதனால் மாணவர்களில் கல்வி, விவசாய நடவடிக்கைகள் மற்றும் சிறுதொழில் முயற்சிகள் பாதிக்கப்படுகின்றன. மின்சாரம் வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட மின் அத்தியட்சகர் மற்றும் பொறியியலாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்த போது, வழங்குகின்றோம் எனக்கூறினர். ஆனால், வழங்குவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
இதனையடுத்த, முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் கோரிக்கைகள் முன்வைத்துள்ளதாக கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
9 hours ago