2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டிய விழிப்புணர்வு நடைபவனி

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டிய விழிப்புணர்வு நடைபவனியும் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும், நேற்று  வியாழக்கிழமை (15) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, கிளிநொச்சி மாவட்ட மாற்றத்திறனாளிகள் சங்கத்தின் கண்டி நிறுவனம் மற்றும் காவேரி கலாமன்றம் ஆகியவற்றின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளில், முன்னதாக கிளிநொச்சி டிப்போச் சந்தியில் இருந்து மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் மற்றும் உரிமைகளை வலியுறுத்திய விழிப்புணர்வு பேரணி ஆரம்பிக்கப்பட்டு, மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபம் வரைச்சென்றது. அதன் பின்னர் அங்கு, மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் ஆ.சிவநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா கலந்துகொண்டார்.

இதன்போது, ஜனாதிபதி, பிரதமர், வடமாகான முதலமைச்சர் ஆகியோருக்கான மகஜர்களும், நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .