2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

மீள் செய்கைகைக்கு முயற்சிக்கவும்

Gavitha   / 2016 மே 24 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

அக்கராயன் விவசாயிகள் சிறுபோக மீள் நெற்செய்கைக்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அக்கராயன் குளத்தின் கீழான கமக்காரர் அமைப்பின் பிரதிநிதிகளை மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (23) சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,'கடந்த மழையின் போது சிறுபோக நெற்செய்கையில் பேரழிவைக் கண்ட மாவட்டமாக கிளிநொச்சி விளங்குகின்றது. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு, தற்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நெற்பயிர்களும், மேட்டுநிலப்பயிர்ச் செய்கைகளும் அழிவடைந்துள்ளன. 4,000 ஏக்கர் வரையான பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது.

அத்துடன், விவசாய, போக்குவரத்து வீதிகள் சேதமடைந்துள்ளன. மக்கள் போக்குவரத்து செய்யமுடியாதளவுக்கு நிலைமைகள் உள்ளன. தட்டுவன்கொட்டி, உருத்திரபுரம் போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் பயணிக்க முடியாதுள்ளது' என அவர் மேலும் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் மேலதிக செயலாளர் ச.மோகனபவன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.சுதாகரன், கிளிநொச்சி கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் ரி.தயாரூபன், அக்கராயன் விவசாய பிரதிநிதிகள் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .