2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்

George   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்,  மாவட்டச் செயலக மண்டபத்தில் திங்கட்கிழமை (19) ஆரம்பமாகியது.

இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் ஆரம்பமாகியது.

மறைந்த வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனின் நினைவு பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாந்தை கிழக்கு, துணுக்காய், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, வெலிஓயா ஆகிய பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--