2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

‘யுத்தகால வன்சக்தி செயற்பாடே தமிழர்கள் வாக்களிக்காமைக்குக் காரணம்’

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

உங்களின் யுத்தகால வன்சக்தி செயற்பாடே காரணமாகவே, நீங்கள் ஜனாதிபதியாக ஆகிவிடக் கூடாததென்று,  வடக்கு - கிழக்கு மக்கள் மென்சக்தியுடைய ஒருவருக்கு வாக்களித்தார்களென, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின்  தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர், இன்று (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், தமிழ் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளதால்தான் தன்னெழுச்சியாக வாக்களித்தார்களெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்ததால்தான் வாக்களித்தார்கள் என்றில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இருந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியைப் போல், இந்த ஆட்சி இருக்காதென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள அவர், நம்பிக்கையும் விசுவாசத்தையும் ஏற்படுத்தி, நல்லிணக்கத்துக்கு வழிவகுக்க வேண்டியது உங்கள் தார்மீக கடமையும் பெறுப்பும் ஆகுமெனக் கூறியுள்ளார்.

நாட்டில், புதிய வழி பிறக்கும் வாழ்வுரிமைக்காகவே தமிழ் மக்கள் போராடுகிறார்களெனவும் அவர்கள்  வன்முறையாளர்கள் அல்லரெனவும், அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .