2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு மாகாணத்தில் கபில வெண்முதுகு தத்தியின் தாக்கம் அதிகரிப்பு

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

வடக்கு மாகாணத்தில், தற்போது நிலவி வரும் மழை காரணமாக, நெற்பயிர்ச் செய்கையில், கபில வெண்முதுகு தத்தியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

வடமாகாணத்தின் அனைத்து பிரதேசங்களிலும், தற்போது நெற்செய்கை பயிரிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தற்போது மழையுடன் கூடிய வானிலை நிலவுவதன் காரணமாக, கபில வெண்முதுகு தத்தியின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால், நெற்பயிர்ச் செய்கை அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வட மாகாண விவசாய பணிப்பாளர் இன்று (26), பல்வேறு இடங்களிலும் கள ஆய்வுகளை மேற்கொண்டார்.

இதன்போது, பயோ சுகாதாரத்துறை எவ்வாறு பாதுகாப்பது, கிருமி நாசினிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது, அவற்றினூடாக இந்தப் பூச்சியின் தாக்கத்திலிருந்து நெற்பயிர்ச்செய்கையை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பன தொடர்பில், விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .