2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

வட மாகாண சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்

Kanagaraj   / 2016 ஜூலை 09 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்
வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக செ. மயூரன், இன்று சனிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின், சுழற்சி முறை ஆசனத்துக்கான உறுப்பினராக இதுவரை பதவி வகித்து வந்த எம். பி. நடராசா, கடந்த மாதம் முதலாம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் அடுத்த சுழற்சி முறை ஆசனத்துக்காக செ.மயூரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ அமைப்பின் உறுப்பினரான இவர், அக் கட்சியின் தலைவரும்; நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் முன்னிலையில் வவுனியா அலுவலகத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .