Editorial / 2020 மார்ச் 12 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
நாடாளுமன்றத் தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், வன்னித் தேர்தல் மாவட்டத்தை உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவப்பிரகாசம் சிவமோகன், சாந்தி ஸ்ரீகந்தராசா, பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரும் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், செந்தில்நாதன் மயூரன் ஆகியோரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், கந்தையா சிவலிங்கம் ஆகியோரும் போட்டியிடவுள்ளனரென அறியமுடிகிறது.
டெலோவில் போட்டியிடும் மூன்றாவது வேட்பாளர் இதுவரை தேர்வுசெய்யபடாத நிலையிலேயே, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனை வேட்பாளராக நியமிக்க கட்சித் தலைமைக் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
9 minute ago
16 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
35 minute ago
1 hours ago