2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

வன்னேரிக்குளத்தை ஆக்கிரமிக்கும் உவர் நிலை

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – வன்னேரிக்குளமும் அதனையண்டிய பகுதிகளும் தற்போது  உவர் ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருவதால், மக்கள் குடிபெயரும் கிராமங்களாக மாறி வருகின்றன எனவும் இவற்றைப் பாதுகாப்பதற்கு நிதிகளை ஒதுக்கி நிலைபேறான அபிவிருத்திகளை முன்னெடுக்குமாறு இக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள 42 கிராம அலுவர் பிரிவுகளில் ஒன்றாகக் காணப்படும் வன்னேரிக்குளத்தின் 495க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த  சுமார் 1,700க்கும் மேற்பட்டோர் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக இக்கிராமங்களை அண்டிய உவர் நீர்த் தடுப்பணைகள் சேதமடைந்ததால், உவர் நீர் உட்புகுந்து வழமான பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.

இதனால் இங்குள்ள மக்கள் வேறு இடங்களிற்கு குடிபெயர்ந்து சென்றுள்ளனர்.
இக்கிராமங்களில் பருவமழை காலத்தில் மேலதிகமான நீர் முடக்கன் ஆற்றின் ஊடாக மண்டைக்கல்;லாற்றில் இணைந்து பூநகரிக்கடலில் கடக்கின்றது வழமை.

உவர் நீர் த்தடுப்பணைகள் அழிவடைந்ததால் கடற்பெருக்கு காலங்களில் மண்டைக்கல்லாறு வழியாக வரும் உவர் நீர் முடக்கனாறு மற்றும் இதனையண்டிய விவசாய நிலங்களிலும் பரவி உவர்ப்பரம்பல் காணப்படுகின்றது.

இங்குள்ள 600 ஏக்கருக்கும் மேற்பட்ட வளமான பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன எனவும், அவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .