Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
மழை காலத்தில், வெள்ளம் தேங்கி நிற்கும் பாடசாலைகளில் இருந்து வெள்ளத்தை வடிந்தோட வைப்பதற்கான வசதிகளை, பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து பெற்றோர்களும் மேற்கொள்ள வேண்டுமென, கிளிநொச்சி மாவட்டச் சுகாதாரத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தொடர்ந்தரைத்த திணைக்களம், பாடசாலைச் சூழலில் வெள்ளம் தேங்கி நிற்பால், டெங்கு நுளம்புப் பெருகும் அபாயம் உள்ளதாகவும் மாணவர்கள் ஈரப் பாதணிகளுடன் வகுப்பறைகளில் இருப்பதன் காரணமாக, காய்ச்சல் ஏற்படுவதற்கான நிலைமை காணப்படுவதாகவும் கூறியது.
பாடசாலைக் காணியில் இருந்து மழை வெள்ளத்தை வடிந்தோட வைப்பதற்கான வசதிகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டுமெனத் தெரிவித்த திணைக்களம், பாடசாலை கிணறுகளில் வெள்ள நீர் கலக்கின்றதா என்பதை, பாடசாலை நிர்வாகம் அவதானித்து, அது தொடர்பில் சுகாதாரத் திணைக்களத்துக்கு அறிவித்து, உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் கூறியுள்ளது.
கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள 112 பாடசாலைகளில் 104 பாடசாலைகள் இயங்குகின்றன. அவற்றில், 33,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
24 minute ago
2 hours ago