2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் இயல்புவாழ்க்கை பாதிப்பு

ரொமேஷ் மதுஷங்க   / 2017 மே 25 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க, க.அகரன்

வவுனியா மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்து சொத்துக்களுக்குச் சேதமேற்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயன்று பெய்த கடும் மழையால், வவுனியா பொலிஸ் தலைமையக வளாகத்திலிருந்த மரங்கள் முறிந்து விழுந்ததில், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன், பொலிஸாரின் உத்தியோகபூர்வ இல்லங்கள் சிலவும் சேதமடைந்துள்ளன.

இது தவிர, மரங்கள் முறிந்து விழுந்ததால், மாவட்டத்தில் சுமார் 12 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் முறிந்துவிழுந்த மரங்களை அகற்றுவதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .