2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வவுனியாவில் டிப்பர் மோதி சிறுமி பலி

Editorial   / 2019 நவம்பர் 06 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா இலுப்பையடி பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமி ஒருவர், ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகளை மோதியுள்ளது.

இதன் காரணமாக திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுமி ஸ்தலத்தில் பலியானதுடன் தாயார் சிறு காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிப்பரின் சாரதி தப்பியோட முற்பட்டபோது பொலிஸார் மற்றும் அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் துரத்தி பிடித்து பொலிஸ் நிலைத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .