Menaka Mookandi / 2016 ஜூலை 15 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்று இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், தங்களது வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'அண்மைக் காலமாக, புனர்வாழ்வு பெற்றுவந்த போராளிகள், மரணத்தை தழுவி வருகின்றனர். இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் போராளிகளுக்கு வைத்திய பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பலமடைந்து வருகின்றது.
இவற்றை கருத்திற்கொண்டு, முன்னாள் பேராளிகளுக்கு வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, வடக்கு - கிழக்கு உட்பட நாட்டின் எப்பகுதியில் இருக்கும் முன்னாள் பேராளிகளும், 0777735081, 0773169997 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு, இலவச வைத்திய பரிசொதனைக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்' என அவர் அறிவித்துள்ளார்.
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago