2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

விபத்தில் உரிமையாளர் பலி : ஒருவர் படுகாயம்

Gavitha   / 2016 மார்ச் 13 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (13) காலை 6.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரத்தில் இயங்கி வரும் டி.ஜீ.ஜீ கடல் உணவு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரான டி.ஜீ.தீபால் சந்தன (வயது-46) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார்.

குறித்த நிறுவனத்தின் உரிமையாளரும் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய மூவரும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னாருக்கு, கடல் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கூலர் ரக வாகனத்தில் தலைமன்னாரை நோக்கிச் சென்றுள்ளனர்.

இதன்போது, மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட கோளாறு காரணமாக, குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தோட்டவெளி பிரதான வீதிக்கு அருகிலுள்ள பனை மரமொன்றுடன் மோதியுள்ளது.
இதன்போது, நிறுவனத்தின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உதவியாளராக வந்த அஜித் என்பவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சாரதி சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் எவ்வித பாதிப்புகளும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்புடைய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--