2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

Niroshini   / 2016 மார்ச் 22 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, மூன்றாம் கட்டை சந்தி பகுதியில் திங்கட்கிழமை(21) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேப்பாபிலவு மாதிரிக்கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை விஜயகுமார் (வயது 32) எனும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்ததிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .