2021 மார்ச் 01, திங்கட்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினர் உதவி

George   / 2016 மே 17 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன், சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களின் உடமைகளையும் இராணுவத்தினர் மீட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழையில் வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த இரண்டு நாட்களில் 373 மில்லிமீற்றர் மழை பதிவாகியது.

இதனால், தாழ்நிலங்களில் வசித்த மக்களும் தற்காலிக வீடுகளில் வசித்த மக்களும் பாதிக்கப்பட்டனர். சில கிராமங்களுக்கான வீதிகள் வெள்ளத்தால் மூடியதால், அந்தக் கிராமங்களுக்கான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளன.

இவ்வாறு தாழ்நிலப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிவபுரம் பகுதி மக்களையும், அவர்களின் உடமைகளையும் இராணுவத்தினர் மீட்டு, அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர்.

இதேவேளை, சிவபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாகக் கொண்டுள்ள நிலையில், வெள்ளத்தை காரணமாக வைத்து அம்மக்களின் கால்நடைகளை சிலர் திருடி வருகின்றனர். இதனால், தங்களின் வாழ்வாதாரம் முழமையாக பாதிப்படும் அபாய் உள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .