2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

விஷ ஊசி அச்சம் தீவிரம்

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 16 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சண்முகம் தவசீலன், நடராசா கிருஸ்ணகுமார்

முன்னாள் போராளிகளின் தொடர்ச்சியான உயிரிழப்புகள், தடுப்பு முகாம்களில் விஷ ஊசி ஏற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினை, மேலும் வலுப்படுத்தியுள்ளதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.

புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளியான துரைராசா சுலக்ஷன் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) திடீரென உயிரிழந்தார். அவரது இறுதிக் கிரியைகள், நேற்று முன்தினம் புதன்கிழமை (14) இடம்பெற்ற இவரது இறுதிக் கிரியையில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தொடர்ந்து கூறியதாவது,

“சுலக்ஷனின் திடீர் உயிரிழப்பு, தடுப்பு முகாம்களில் விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான சந்தேகத்தை, மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சுலக்ஷன், புனர்வாழ்வு பெற்றதை அடுத்து, கூலி வேலை செய்தே, தன்னுடைய பெற்றோரைப் பராமரித்து வந்தார். அவருக்கு திடீரென ஏற்பட்ட காய்ச்சல், மரணத்தை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--