2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

வடபகுதிக்கு 10 புதிய உப தபாலகங்கள்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 25 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹேமந்த்) 

வடபகுதியில் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் பத்து உப தபாலகங்கள் மீண்டும் இயங்கவுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த உப தபாலகங்கள் அமைக்கப்படவுள்ளன. போரின் காரணமாக இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட இந்தத் தபாலகங்களை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி யாழ்ப்பாணத்தில் குரும்பசிட்டி, கீரிமலை, தனங்கிளப்பு ஆகிய இடங்களிலும், கிளிநொச்சியில் தட்டுவன்கொட்டி, கிளாலி ஆகிய இடங்களிலும் மன்னார் மாவட்டத்தில் கொக்குப்படையான், பெரியபொற்கேணி, பண்டாரவெளி, பரப்புக்கடந்தான் ஆகிய இடங்களிலும் வவுனியா மாவட்டத்தில் மருதோடையிலும் இந்த தபாலகங்கள் அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .