2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

1090 முஸ்லிம்கள் மன்னாரில் மீள்குடியேற்றம்

Kogilavani   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார், தாராபுரம் மற்றும் தலைமன்னார் பியர் ஆகிய இரண்டு கிராமங்களிலும் 1090 முஸ்ஸிம் குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்காக  நேற்று  அழைத்து வரப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் முதலீட்டு விவகாரம் அமைச்சர் றிஷாட் பதீயுதின் தெரிவித்தார்.

1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டு இடம்பெயர்ந்து கற்பிட்டி பகுதியில் வாழ்ந்து வந்த முஸ்ஸிம் மக்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களில் 670 குடும்பத்தினர் தாராபுரம் கிராமத்திலும் 420 குடும்பத்தினர்  தலைமன்னார் பியர் பகுதியிலும் மீள்குடியேற்றத்திற்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி மீள்குடியேற்ற நிகழ்விற்கு அமைச்சர் றிஸாட் பதீயுதீன்,  நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்,  மன்னார் பிரதேசச்செயலாளர் ஸ்ரான்லி டி மெல் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--